3 மாநிலங்களில் நடக்கும் பாலியல் தொழில் நெட்வொர்க்கை காலி செய்த 16 வயது சிறுமி!

0
1834

மூன்று மாநிலங்களில் பாலியல் தொழில் செய்து வந்தவர் சோனு புஞ்சபான். இப்பெண்ணை கைது செய்தது. இவருக்கு எதிராக சாட்சிகள் எதுவும் இல்லாததால் போலிஸார் திணறி வந்தனர். டெல்லி, உத்திர பிரதேஷ், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் பாலியல் தொழிலை நடத்தி வந்தார் சோனு புஞ்சபான்.

சோனு புஞ்சபான்

இவரை 2011 ஆம் ஆண்டு போலிஸார் கைது செய்தது. ஆனாலும் இவருக்கு எதிராக சாட்சிகள் எதுவும் இல்லை என்பதால் 2014 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். சோனு புஞ்சபான் 2011ல் வழக்கு பதியப்பட்ட பின் 2012ல் ஒரு 16 வயது சிறுமி சாட்சியம் அளிக்க முன்வந்தார். அதன்படி அவர் போலீசிடம் சோனு பஞ்சபான் செய்த அனைத்து குற்றங்கள் குறித்தும் கூறினார். தான் அங்கு அடிமையாக இருந்ததாகவும், பாலியல் தொழிலில் சோனு பஞ்சபான் தன்னை ஈடுபடுத்தியதாகவும் கூறினார். 2009ல் இந்த பெண் காணாமல் போனதாக அவரது பெற்றோரால் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் அந்த சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 11 பேரிடம் கை மாறி கடைசியாக சோனு புஞ்சபானிடம் வந்து சேர்ந்து இருக்கிறார்.

சோனுக்கு பயந்து  இவ்வளவு நாளாக தலைமறைவாக இருந்த அந்த சிறுமியை போலீஸ் தற்போது கண்டுபிடித்து இருக்கிறது. அந்த சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த 6 மாதமாக திட்டம் தீட்டி போலீஸ் சோனு புஞ்சபானை கைது செய்தது. தற்போது சோனு பஞ்சபானுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் திரட்டப்பட்டு இருக்கிறது. அவர் தனது குற்றத்தையும் ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதனால் 3 மாநிலங்களில் நடந்த பாலியல் தொழில் பெரிய அளவில் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்