ரஜினியின் ஆன்மீக குரு ‘பாபாஜி’ பற்றிய பிரம்மிப்பூட்டும் 10 தகவல்கள்!

0
9409

பாபாஜி, இந்த வார்த்தைக்குதான் எத்துனை சக்தி? எத்துனை மகத்துவம்? ரஜினியின் வாழ்க்கையை எளிய இடத்தில் இருந்து துவக்கி, பேருந்து நடத்துனராக்கி, பின் நடிகனாக்கி, சூப்பர் ஸ்டாராக்கி, இப்போது அரசியலுக்குள்ளும் பிரவேசிக்க வைத்துள்ளது. யார் இந்த பாபாஜி? எங்கே இருக்கிறார்? எப்படி மகா அவதாரமானார்? உள்ளிட்ட பிரம்மிப்பூட்டும் தகவல்களை இங்கே பார்ப்போம்.

ரஜினியின் ஆன்மீக குரு 'பாபாஜி' பற்றிய பிரம்மிப்பூட்டும் 10 தகவல்கள்!

1. விடுதலைப் போராட்ட தியாகியான டாக்டர் ராம்போஸ்லே, பாபாஜியுடன் கிட்டத்திட்ட ஆறு ஆண்டுகள் வாழ்ந்ததாக கூறியிருக்கிறார். பாபாஜியை பற்றிய அதிசயமான பல விஷயங்களை அவர் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். பாபாஜி எந்த வடிவத்திலும் தோன்றுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2. தேடிக் கண்டுபிடிக்க நினைத்து இமயமலைச் சாரல்களில் அலைவதை விட, அவரிடம் சரணடைந்து ஓரிடத்தில் அமர்ந்து தியானம் மேற்கொண்டால், பாபாஜி தரிசனம் கிடைக்கும். அவரே உங்களைத் தேடி வருவார் என அனுபவசாலிகள் தெரிவிக்கின்றனர். ரஜினி உட்பட.

3. கிபி 203ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதியன்று, கார்த்திகை திருவிளக்கீடு திருநாலான்று கடலூருக்கும், சிதம்பரத்திற்கும் இடையே உள்ள பரங்கிப்பேட்டை கடலோரப் பகுதியில் வசித்த பிராமணத் தம்பதிகளுக்கு பிறந்தவர்தான் பாபாஜி.

4. பாபாஜி யார் என்பதை தெரிந்துகொள்ள விரும்பிய யோகிராமையா என்பவர் தனது தியானத்தின் மூலம் பாஜியின் வாழ்க்கை வரலாறு முழுவதையும் காட்சிகளாக கண்டிருக்கிறார் என்று ஆவணங்கள் கூறுகின்றன.

5. இந்த பாபாஜியே கிரியா யோகம் என்னும் யோக முறையை கண்டுபிடித்ததாகவும், சித்தரான போக முனியின் சீடராக விளங்கியதாகவும் கூறப்படுகிறது. ஈரோடு, நம்பியூர் அருகில் பாபாஜிக்கு தனி ஆலயமும் உள்ளது.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்