‘நெட் நியூட்ராலிட்டி” அமலுக்கு வந்தால் இந்த 5 விஷயங்கள் நடக்கும்!

0
2542

ஆட்சி கட்டிலில் உட்காருபவர்கள் எல்லாம் எல்லோருக்கும் இலவச இணைய சேவை, டிஜிட்டல்துவம், கிராமங்களுக்கு இலவச இணைய இணைப்புகள் என மேடைக்கு மேடை, ட்வீட்டுக்கு ட்வீட் கூவிக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த நான்கு ஆண்டுகளில் புதிதாக தலைதூகியிருக்கிறது நெட் நியூட்ராலிட்டி எனும் புதிய பிரச்சினை. இன்றும் கூட ட்விட்டரில் டிரென்டாக வலம் வந்தது இந்த டாப்பிக்.

நெட் நியூட்ராலிட்டி என்பது இணைய சமநிலை. இணையதள சேவை வழங்கும் செல்போன் நிறுவனங்களும், அரசும் அனைத்து இணையதள தேட்டாக்களையும் சமநிலையில் வழங்க வேண்டும். ஒரு வாடிக்கையாளருக்கும் மற்றுமொரு வாடிக்கையாளருக்கும் இடையே எவ்வித கட்டண வித்தியாசத்தையும், பாகுபாட்டையும் காட்டக்கூடாது என்பதுதான். இதற்காக குரல் கொடுப்பவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. நெட் நியூட்ராலிட்டி என்ற விதியை ட்ராய் அமலுக்கு கொண்டு வந்தால் இந்த நான்கு பாதிப்புகளை நாடு எதிர்கொள்ள நேரிடும் என்பதை இங்கே பதிவு செய்துள்ளோம்.

  1. இணைய சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது அல்லது நிபந்தனைகளுடன் வழங்கப்படும்.

2. ஒவ்வொரு இணையதளத்திற்கும் தனித்தனி கட்டணங்களை செலுத்த வேண்டும் என்பதால் நிதிச்சுமை ஏற்படும்.

3. இணைய பயன்பாட்டில் தனிமனிதனுடைய பொருளாதார சுமைகள் அதிகரிக்கும்.

4. கார்பரேட்களுக்கு மட்டுமே சாதகமான, லாபகரமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டது இத்திட்டம்.

5. டெலிகாம் ஆப்பரேட்டர்களுக்கு அதிக லாபமும், பயனாளிகளுக்கு குறைந்த சேவையும் வழங்கப்படும் நிலை உருவாகும்.

உங்க கருத்தை தெரிவிக்கலாம்