ஜென்ம பலன்களை அள்ளி வழங்கும் சிவராத்திரி வழிபடும் முறை…!

0
739

சிவராத்திரி கொண்டாடப்படும் நாளை நான்கு ஜாமங்களாக பிரிக்கலாம். இந்த நான்கு ஜாமங்களின் அடிப்படையில்தான் சிவராத்திரி பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.

முதல் ஜாமம் – மாலை 06:05 மணி முதல் இரவு 09:20 மணி வரை
இரண்டாம் ஜாமம் – இரவு 09:20 மணி முதல் இரவு 12:35 மணி வரை
மூன்றாம் ஜாமம் – இரவு 12:25 மணி முதல் அதிகாலை 03:49 மணி வரை
நான்காம் ஜாமம் – அதிகாலை 03:49 மணி முதல் காலை 07:04 மணி வரை

 

முதல் ஜாமத்தில் ஈசனுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம், சந்தனப்பூச்சு, வில்வம், அத்தாமரை அலங்காரம் செய்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

இரண்டாம் ஜாமத்தில் ஈசனுக்கு சர்க்கரை, பால், தயிர், வெண்ணை, நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்தம் மற்றும் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

மூன்றாம் ஜாமத்தில் ஈசனுக்கு தேன், பச்சை கற்பூரம், மல்லிகைப்பூ, எள் அன்னம் கொண்டு படைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

நான்காம் ஜாமத்தில் கரும்புச்சாறு, நந்தியாவட்டை மலர், அள்ளி மலர் கொண்டு படைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

செய்ய வேண்டியவை:

  • வீட்டை கோமியம் தெளித்து புனிதப்படுத்த வேண்டும்.
  • சாமி அறையில் தீபங்கள் ஏற்றி, மங்களகரமாக அமைக்க வேண்டும்.
  • பிரசாதமாக சுத்தமான வீபுதியை பயன்படுத்த வேண்டும்.
  • வில்வ இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம்.
  • சிவலிங்கம் அல்லது ஈசனின் படத்திற்கு மலர் மாலைகள் சாற்றி, 108 முறை ஓம்
  • நமச்சிவாய என மந்திரம் சொல்ல வேண்டும்.
  • விரத வேளையில் உணவு உண்ணக்கூடாது, தூங்கக்கூடாது.

மந்திரங்கள்:
அழகிய தமிழில் தேவாரம் பாடலாம். குறிப்பாக திருவண்ணாமலைப் பதிகம், திருக்கேதீச்சரப் பதிகம் பாடலாம்.
சம்ஸ்கிருத மந்திரங்கள் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை.